NN

Saturday, March 21, 2015

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம்

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம்
சிறுநீரகக் கல் :
சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உருவாகி நகரும் வரை எந்த அறிகுறியினையும் ஏற்படுத்தாது.
சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள்:
* விலா எலும்பின் கீழ், பின்புறம், பக்கவாட்டில் வலி ஏற்படும்.
* இந்த வலி அடி வயிறு தொடைமடிப்பு வரை பரவும்.
* சிறுநீர் வெளியேறும் பொழுது வலி ஏற்படும்.
* சிவப்பு, ப்ரஷன் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.
* நாற்றமுடைய சிறுநீர் வெளியாகும்.
* வயிற்றுப் பிரட்டல், வாந்தி இருக்கும்.
* அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.
* ஜுரம் இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் ஏற்பட்ட உடனேயே மருத்துவரை அணுக வேண்டும்.
பொதுவில் சிறுநீரக கல் உருவாக பல காரணங்கள் உண்டு. கால்ஷியம், ஆக்ஸலேட், யூரிக் ஆசிட் போன்றவைகள் காரணமாகின்றன.
* பரம்பரை
* போதிய அளவு தண்ணீர் குடிக்காமை
* சிலவகை உணவு
* அதிக எடை
* செரிமான கோளாறுகள்
* சில வகை மருந்துகள் இவற்றால் சிறுநீரகக்கல் ஏற்படுகின்றது. ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் இவைகளால் சிறுநீரகக் கல் கண்டறியப்படுகின்றது. அளவுக் கேற்றபடி சிகிச்சை முறை கையாளப்படுகின்றது.
சிறுநீரக கல் வராமல் தடுக்க :
* தினம் 2 லிட்டர் தண்ணீராவது குடியுங்கள்.
* அசைவ உணவையும், உப்பையும் அளவோடு உண்ணுங்கள்.

No comments:

Post a Comment

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம்

சிறுநீரகக் கல் ஏற்படுத்தும் அறிகுறிகள் - தெரிந்துகொள்வோம் சிறுநீரகக் கல் : சிறுநீரகக் கல், சிறுநீரகத்தில் அல்லது சிறுநீர் குழாயில் உரு...